சங்கடத்தை உண்டாக்கும் வாய் துர்நாற்றத்தை எப்படி போக்குவது?



வாய் அடிக்கடி வறண்டு போவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்



காபி, ஜூஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவையும் இந்த பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகின்றன



இறந்த செல்களை தோல் தானாகவே வெளியேற்றுவதுபோல், பல்லால் வெளியேற்ற இயலாது



சிறுநீரக நோய்கள், நுரையீரல் நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்றுநோய், சர்க்கரைநோய் பிரச்னைகள் இருப்பவர்களின் வாய் சீக்கிரம் வறண்டு போகும்



போதுமான அளவு தண்ணீர் குடித்தால், வாய் வறண்டுபோவதைத் தடுக்க முடியும்



சிகரெட், புகையிலை சார்ந்த பொருள்கள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்



இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு முறை பல் துலக்கவேண்டியது மிகவும் அவசியம்



பிளாக் டீ அல்லது கிரீன் டீயில் வாயைக் கொப்பளிப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும்



நாக்கைச் சுத்தம் செய்தல் துர்நாற்றம் குறையும்