வெயில் ஒளிபட்டு மினுங்கும் வெண்கல நிறச் சருமம், மேகப் பொதி போன்ற நீளக் கூந்தல், ஏஞ்சலினா ஜோலிக்கள் இறைஞ்சக் கூடும் நீண்ட நெளிவான கால்கள் என பெண்களே காதல் கொள்ளும் காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா



ஆண்களின் ஓவர் ஹீரோயிசத்தால் அலுத்துப்போன காலத்தில் தென்னிந்திய சினிமா கண்ட அப்படியானதொரு ஆளுமையின் இருபத்து ஆறாவது நினைவுதினம் இன்று. சில்க் ஸ்மிதா...



என் உடல்தான் என் ஆயுதம் என அதே சாடித்திரியும் சமூகத்தை சினிமாவின் மூலம் தன் காலடியில் கிடக்க வைத்தவர்.



பிறந்தது கரூரில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் விஜயலட்சுமியாக ஆந்திர மாநிலத்தில், நான்காம் வகுப்பு வரைதான் படிப்பு.



சிறுவயதிலேயே மணம் முடித்துவைக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம்,



நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்தார் பின்னர் வறுமை காரணமாக சினிமாவில் ஒப்பனைக் கலைஞராகச் சேர்ந்தார்.



சைட் ஆர்டிஸ்டுகளுக்கு மேக்கப் போடும் பணி. மேக்கப் போட்டு வந்தவரின் திறமையை கண்டறிந்த நடிகர் வினு சக்கரவர்த்தி, அவரை ‘சிலுக்கு’ என்னும் கதாப்பாத்திரத்தில் தனது திரைப்படத்தில் மறுஅறிமுகப்படுத்தினார்.



சிகரேட் தூக்கிப்போட்டு ஸ்டைல் காட்டி வீர வசனம் பேசிய அதே ஹீரோக்கள் இவருடன் ஒரு பாடலில் நடிக்கக் கால்ஷீட் கேட்டு போட்டி போட்டனர்.



தனது 35 வயதிலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டார். சினிமா தயாரிப்பு தோல்வி, காதல் தோல்வி என பல தோல்விகளை அவர் தூக்கிட்டுக் கொண்டதற்குக் காரணமாகச் சொன்னார்கள். உண்மையில் அது ஒரு ஆளுமையை அங்கீரிக்கத் தெரியாத சமூகத்தின் தோல்வி.



நான்கு வருடத்தில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் .நேற்று முளைத்து நாளை வாடும் ஹீரோயிசக் காளான்களுக்கு இடையே ‘சில்க்’ ஸ்மிதா என்னும் தனித்துவம் நிரந்தரமானவர்.