இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளிக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் செய்த சாதனைகளை இதில் பார்ப்போம். ஹர்மன்பிரீத் கவுர்கடைசி 11 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்மன்ப்ரீத் கவுர் 143 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணி 333 ரன்கள் குவித்தது. இதன்மூலம், ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனாவின் ஒருநாள் சதங்களின் சாதனையை சமன் செய்தார். இருவரும் தலா 5 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலமாக 23 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்தில் 1999ஆம் ஆண்டு கடைசியாக 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. அப்போது சந்தர்கவுந்தா கவுல் கேப்டனாக இருந்தார். அவரும் பஞ்சாபை சேர்ந்தவர். தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் பஞ்சாபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைகள் தொடரட்டும் ஹர்மன்ப்ரீத் கவுர் ..