இந்த அவசர உலகில் அனைத்தும் வேகமாக முடிந்து விட வேண்டும் என்று எண்ணுகிறோம்



அனைத்திலும் அவசரம் காட்டும் நாம் சாப்பாட்டிலும் அப்படி தான்



சப்பாத்தி, ப்ரெட் என அனைத்திற்கும் டொமெட்டோ கெட்சப் தொட்டு சாப்பிடுகிறோம்



இதற்கு குழந்தைகளும் பழக்கம் ஆகி விடுகின்றனர்



குழந்தைகளுக்கு டொமட்டோ கெட்சப் கொடுப்பது நல்லதா..? என்பது குறித்து பார்ப்போம்



அடிக்கடி கெட்சப் சாப்பிடும் குழந்தைகள் உடலில் உப்பு, நிறமி என தேவையற்ற ரசாயனங்கள் சேர்கின்றன



இது இளவயது உடல்பருமனுக்கு வழி வகுக்கும்



இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்



கெட்சப் அடிக்கடி சாப்பிடுவதால் அஜீரண கோளாறுகள் ஏற்படலாம்



இது குழந்தைகளுக்கு குடல் பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்