மசாலா டீ அதிகம் குடிப்பவாரா..? அப்போ இதை படிங்க..! ஒரு கோப்பை தேநீருடன் நாளை தொடங்குவது நம்மில் பலரின் வழக்கமாகும் பிளாக் டீ, மசாலா டீ, க்ரீன் டீ அல்லது பால் டீ என அவர் அவர்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து குடிக்கின்றனர் குளிர்காலத்தில் மசாலா தேநீர் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது ஆனால் அதிகப்படியாக இதை உட்கொண்டால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது முழு மசாலா பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை ஏற்படலாம் சிலருக்கு குறிப்பிட்ட மசாலாப் பொருட்களை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம் மசாலா தேநீரில் உள்ள மசாலா பொருட்களின் செழுமை, இரத்த அழுத்த அளவை அதிகரிக்க வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது ஏராளமான மசாலாப் பொருட்கள் சில நேரங்களில் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும் மசாலா தேநீரில் உள்ள கருப்பு மிளகு கண் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும், கர்ப்பிணி பெண்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது