சிலருக்கு குளிர்காலம், வெயில் காலம் என எந்த கால நிலை என்றாலும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் மாறாது



அதை சூடாக குடித்தால் இதமாக இருக்கும் என நினைப்பார்கள்



வெந்நீர் குடிக்கும் முன் இதெல்லாம் தெரிஞ்சுகோங்க..!



குளிர்காலம் வந்து விட்டால் பலருக்கும் வெந்நீர் இல்லாமல் நேரம் நகராது



குளிருக்கு இதமாகவும், உணவு செரிமானமாகவும் நம்மில் பலரும் வெந்நீருக்கு முன்னுரிமை அளிப்போம்



ஆனால் இத்தகைய வெந்நீரை சிலர் ஆவி பறக்க குடிக்க விரும்புவார்கள்



அப்படி குடிப்பது வாய், தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றில் காயத்தை ஏற்படுத்தலாம்



வெந்நீரில் உள்ள சுடு தன்மை உடலின் வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதால் தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது



வெந்நீர் மட்டுமல்ல சுட சுட எது குடித்தாலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை



இதனால் வெதுவெதுப்பான அல்லது மிதமான சூட்டில் வெந்நீர் குடிப்பதே சிறந்தது