எனர்ஜி ட்ரிங் அதிகமாக குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? எனர்ஜி டிரிங்கில் சராசரியாக லிட்டருக்கு 150 மி.கி காஃபின், சர்க்கரை, வைட்டமின்கள் உள்ளன கூடுதலாக தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் பல்வேறு அளவுகளில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர் அதிகமாக எனர்ஜி ட்ரிங்க் அருந்துபவர்களுக்கு தூக்கமின்மை சிக்கல் ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது தினமும் இதை குடிக்கும் பழக்கம் இருந்தால் இரவில் தூக்கம் கெடும் என்று ஆய்வு தெரிவிக்கிறது மாதத்திற்கு 1-3 முறை எனர்ஜி டிரிங்க் குடிப்பவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிபிடப்பட்டுள்ளது தினமும் எனர்ஜி டிரிங்க் குடிப்பவர்களுக்கு இன்சோம்னியா சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர் மாதத்திற்கு 1-3 முறை மட்டுமே எனர்ஜி டிரிங்க் அருந்துபவர்களுக்கும் தூக்க பிரச்னைகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர் இதனால் முடிந்த அளவிற்கு இதன் பயன்பாட்டை குறைத்து கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது