இன்றைக்கு பெண்களின் மேக்கப் பாக்ஸில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒன்று, லிப்ஸ்டிக்



உதடுகள் பளீரெனத் தெரிவதற்கும், முக வசீகரத்துக்கும் இது அவசியமே



சில லிப்ஸ்டிக்கில் நம் உடலுக்குத் தீங்கிழைக்கும் மோசமான உட்பொருள்கள் பல உள்ளன



இதில் உள்ள ரசாயனங்கள் உதட்டையும் உதட்டைச் சுற்றியுள்ள பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்



இதில் `ஃபார்மால்டிஹைடு’ என்ற பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது



ஒரே நாளில் மேலும் மேலும் பலமுறை உதட்டில் லிப்ஸ்டிக் தடவுபவர்களுக்கு வயிற்றில் கட்டிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன



இதில் பெட்ரோகெமிக்கல் கலந்துள்ளது. பெட்ரோகெமிக்கல், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் இருந்து தயாரிக்கப்படுகிறது



கண்ணில் பாதிப்பு, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் தோல் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம்



உதட்டுச் சாயங்களில் உள்ள ரசாயனம் மற்றும் இடுபொருட்கள் நம்மை அறியாமலேயே நம் வயிற்றுக்குள் போய்விடும் அபாயமும் உண்டு



தினசரி இதை பயன்படுத்தாமல், தேவைப்படும் போது பயன்படுத்தலாம். தரமான லிப்ஸ்டிக் வாங்குவது அவசியம்