சீரக சம்பா அரிசியில் இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீரக சம்பா அரிசி மிகவும் புகழ் பெற்றது புலாவ், பிரியாணி போன்ற விருந்துகளுக்கு அதிகமாக பயன்படுத்துவது உண்டு சீரக விதைகளைப் போன்று சிறியதாக இருப்பதால் சீரக சம்பா என்று பெயர் பெற்றது சீரக சம்பா அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை உடல் பருமன் உடையவர்கள் கூட இந்த அரிசியை எடுத்துக் கொள்ளலாம் சீரக சம்பா அரிசியில் நிறைய அளவுக்கு செலினியம் காணப்படுகிறது சீரக சம்பா அரிசி உடலுக்கு நிறைய ஆற்றலை அளிக்கக் கூடிய தானியமாகும் கொலஸ்ட்ரால் இல்லாத உணவை தேர்ந்தெடுப்பவர்களுக்கு இது சிறந்தது இது புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது