குடலை சுத்தமாக வைப்பது மிக மிக அவசியம். ஏனென்றால், குடலில்தான் பல வியாதிகள் தொடங்கும் குடல் சுத்தமாக இல்லையென்றால், உப்புசம் போன்ற பிரச்சினைகள் வரும் சில சமயங்களில் மாதவிடாய் வருவதற்கு முன்னரும் வயிற்று உப்புசம் ஏற்படும் தற்போது உப்புசத்தை போக்குவதற்கான தீர்வுகளை பற்றி பார்க்கலாம் ஒவ்வொரு உணவிற்கு பின் தேவையான இடைவெளி இருக்க வேண்டும் அதன் பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும் சோடாவை அறவே தவிர்த்து, தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும் யோகர்ட், ஊருகாய் போன்ற புரோபயாடிக் உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் உடலுக்கு தேவையான அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் தினமும் உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்