முடி வளர்ச்சியை தூண்ட சந்தைகளில் விற்கும் பலவற்றை பயன்படுத்தி இருப்போம்



இப்போது முடி வளர்ச்சிக்கு உதவும் சூப்பர் ஸ்ப்ரேவை வீட்டிலே எப்படி செய்வது என்று பார்க்கலாம்..



இதற்கு தேவையான முக்கிய பொருள் காய்ந்த ரோஸ்மேரி



ரோஸ்மேரியில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் முடி வளர்ச்சிக்கு நல்லது



முதலில் முக்கால் வாசி டம்ளர் தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.



இதை அடுப்பில் வைத்து அதனுடன் காய்ந்த ரோஸ்மேரியை சேர்த்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்



நிறம் மாறிய பின் அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின் ஆற வைக்க வேண்டும்



ஸ்ப்ரே பாட்டிலில் இந்த கலவையை ஊற்றவும். பின், இதை ஸ்கால்ப்பில் படும்படி ஸ்ப்ரே செய்ய வேண்டும்



10 நிமிடங்கள் ஊறவைத்து, ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும்



வாரத்திற்கு ஒருமுறை என 4 மாதங்கள் செய்து வந்தால், மாற்றம் தெரியும் (நல்ல டயட், உடற்பயிற்சி அவசியம்)