இந்தக் காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஸ்ட்ரெஸ் ஆட்டிப்படைக்கிறது



இப்படி ஸ்டரெஸ் ஆக இருப்பவர்களுக்கு ப்ரெயின் ஃபாக் எனப்படும் நிலை ஏற்படலாம்



ப்ரெயின் ஃபாக் என்றால் சில நாட்கள் நம் மனம் வெற்றிடம் போல் இருக்கும்



அதோடு எதிலும் நாட்டத்துடன் ஈடுபட முடியாது, சரியாக கோர்வையாக பேசக் கூட சிரமமாக இருக்கும், எந்த முடிவும் எடுக்க முடியாது



இது வருவதற்கான காரணங்கள் தூக்கமின்மை, அதிகப்படியான வேலை, மன அழுத்தம் என கூறப்படுகிறது



இதில் இருந்து மீள சில வழிமுறைகள் உள்ளன. அதை பற்றி பார்ப்போம்..



உடற்பயிற்சி செய்வதன் மூலம் ப்ரெயின் டிரைவ்ட் நியூரோட்ரோபிக் ஃபேக்டர் எனப்படும் பிடிஎன்எஃப் புரதம் சீராக உருவாகும்



தினசரி சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ளவது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது



தொடர்ந்து வேலை செய்வதை தவிர்த்து விட்டு, 90 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 முதல் 15 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்



யோகா, தியானம் செய்வதன் மூலம் மூட் ஸ்விங்ஸ் குறையலாம்