எந்த நிற ரோஜாவை எந்த அர்த்தத்திற்காக கொடுக்கலாம்!



காதலர்கள் பெரும்பாலும் தங்கள் துணைக்கு சிவப்பு நிற ரோஜாவையே அன்பளிப்பாக வழங்குகின்றனர்



இது எல்லையற்ற அன்பையும், அளவில்லா பாசத்தையும் வெளிப்படுத்தும் அடையாளமாகவும் கருதப்படுகிறது



இளஞ்சிவப்பு நிற ரோஜா ஒருவரை பாராட்டுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் வழங்கப்படும் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது



மென்மையான உணர்வுகள், கருணையை வெளிப்படுத்தும் ஒன்றாக இளஞ்சிவப்பு ரோஜா கருதப்படுகிறது



மஞ்சள் நிற ரோஜா நல்ல உடல்நலம் மற்றும் நீடித்த நட்பை வெளிப்படுத்தும் அடையாளமாக திகழ்கிறது



தோழமை மற்றும் வாழ்த்துகளை தெரிவிக்கும் ஒன்றாக உள்ளது



வெள்ளை நிற ரோஜா ஆன்மீகம் மற்றும் புதிய தொடக்கங்களை வெளிப்படுத்தும் ஒன்றின் அடையாளமாக உள்ளது



வெள்ளை நிற ரோஜா தூய்மை மற்றும் வாக்குறுதியின் அடையாளமாக கருதப்படுகிறது