ஆங்கில நாடகத்தின் தந்தை என அழைக்கப்படுப் வில்லியம் ஷேக்ஸ்பியர்



அவர் எழுதிய நகைச்சுவை நாடகம் ‘தி காமெடி ஆஃப் எரர்ஸ்’



அதை மையப்படுத்தி ’சர்க்கஸ்’ என்ற படத்தை பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கி தயாரித்துள்ளார்



இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்



சர்க்கஸ் படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது



சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அப்படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி நடிகர் விஜய்யை பாராட்டி பேசினார்



விஜய்,ரஜினி, அஜித், கார்த்தி போன்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்



விஜய் மற்றும் ரன்வீர் சிங்கை ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் ரன்வீர் சிங்கிற்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார்



ரோஹித் ஷெட்டி விஜய் மற்றும் ரன்வீரை வைத்து படம் எடுத்தால் என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது