நாம் எல்லா உணவுகளையும் அவ்வளவு எளிதாக சாப்பிட்டுவிடுவதில்லை. சிலவற்றை ஏதாவது ஒரு காரணம் சொல்லி புறந்தள்ளிவிடுகிறோம். அப்படி நாம் ஒதுக்கும் உணவுகளில் ஒன்று தான் டர்னிப் என்னும் நூக்கல். மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் மிக அதிகம். வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்ஸ் அதிகம். மேலும் கால்சியம், ஃபோலேட், மக்னீஸியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது. நார்ச்சத்து அதிகமுள்ளதால் இந்த காயை சாப்பிடுவதால் குடல் நோய்களைக் குணப்படுத்தும். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது உடல் எடை மேலாண்மை க்ளைசிமிக் இண்டக்ஸ் ஆகியன இருப்பதால் உடல் எடை மேலாண்மையில் நூக்கல் நல்ல பலன் தருகிறது.