உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கோலி, உடலை கட்டுக்கோப்புடன் வைத்து இருப்பதில் அதிக கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்ததே. பட்டர் சிக்கன் அவரது ஃபேவரட் ரெசிப்பியாகவும் இருந்தது. ஒடிடி தளத்தில் வெளியான ஒரு தொடரை பார்த்து விட்டு, மாமிசம் உண்ணும் பழக்கத்தை முழுமையாக கைவிட்டுவிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து உணவில் அசைவத்தை சேர்த்துக் கொண்டதே கிடையாது எனவும், கோலியே தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் கோலி கிரிக்கெட் பயிற்சிக்கு மத்தியில் உடற்பயிற்சியிலும் கோலி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மாமிசம் சாப்பிட்டால் தான் கட்டு மஸ்தான உடல்வாகு கிடைக்கும் என்று முன்பு சொன்னார்கள் என, ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த கோலி, ஹாஹா என்ற எமோஜியுடன் உலகின் மிகப்பெரிய கட்டுக்கதை இது தான் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.