பல்பத்தை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உண்பர் இதற்கு முக்கிய காரணம் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி குறைபாடு என்று சொல்லலாம் இதனால் பல்பம் மட்டுமல்ல சாம்பல், மண், செங்கல் போன்றவையும் சாப்பிடத் தோன்றும் இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, குடலில் புழுக்கள் வளர்வதுதான் கால்சியம் சத்துக் குறைபாடு காரணமாகவும், வயிற்றில் பூச்சி தொல்லை உள்ள குழந்தைகளும் இதனை விரும்பி உண்பர் இப்பழக்கம் உடலுக்கு நல்லதல்ல சிறுநீரகம் சரிவர செயல்பட இயலாமல் போகலாம். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை உண்டாகும் கை, கால்களில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது உணவிலும் கவனம் செலுத்தாமல், மருத்துவ சிகிச்சையும் எடுக்காமல் இருந்தால் எலும்புகள் உறுதி இழந்து போகும் ஆபத்து உள்ளது இரும்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு பழகுங்கள்