காதில் உள்ள அழுக்கை நீக்குவது நல்லதா? ஒரு நபரின் தனிப்பட்ட சுகாதாரத்தில் காது குழாய் முக்கிய பங்கு வகிக்கிறது காது குழாயில் ஒருவிதமான வாக்ஸ் சுரக்கும் இந்த வாக்ஸ் காதுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்கின்றன இந்த வாக்ஸ் காதிற்குள் இருப்பது அவசியம். இது வெளியே இருக்கும் நுண்ணுயிரிகளை காதிற்குள் நுழையாமல் தடுக்க உதவும் மக்களில் அதிகமானோர் பட்ஸ் என அழைக்கப்படும் க்யூ டிப்ஸை பயன்படுத்துகின்றனர் அதனால் அழுக்குகள் காதுகளின் கால்வாயின் உட்புறம் தள்ளப்படுகிறது இதனால் தொற்று வர அதிக வாய்ப்புள்ளது காதுகளை கொடைவது நல்ல பழக்கம் அல்ல காதில் வலி அல்லது அடைப்பு ஏற்படும்போது அதிகப்பட்சம் மருத்துவரை அணுகுவதே நல்லது