வாய் துர்நாற்றத்தால், நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் சங்கடம் ஏற்படும்



மேற்கத்திய உணவு முறைகளாலும், அவசரகதி வாழ்க்கை முறையாலும் வாய் நாற்றம் பிரச்சினை ஏற்படுகிறது



பல், ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மைக் காரணங்கள்



வாய் நாற்றம் ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்



மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை ஆகியவற்றில் பிரச்சினை இருப்பது



கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள்



சரியாகப் பல் துலக்காமல் இருப்பது.உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது



பற்களில் கரை படிவது, பல் ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் உண்டாவது



சொத்தைப் பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது



வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை வரவேற்கும் காரணிகள்