12 மணி நேரம் ஊறவைத்த 1 கப் ராஜ்மா, பிரியாணி இலையை குக்கரில் சேர்க்கவும்



இதில் கருப்பு ஏலக்காய், உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விடவும்



நெய்யில், சீரகம், இலவங்கப்பட்டை கிராம்பு சேர்த்து வதக்குக



நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி விழுது சேர்த்து வதக்குக



இதனை மூடி போட்டு சிறிது நேரம் மிதமான தீயில் வேக வைக்கவும்



மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மாங்காய் தூள், கரம் மசாலா சேர்த்திடுக



இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்த ராஜ்மாவை சேர்க்கவும்



கிரேவி கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்



கடைசியாக கசூரி மேத்தி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்