தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் குமரிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. நேற்று (04.02.2023) முதல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது இது இன்று மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 05.02.2023 முதல் 07.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 08.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு : வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 10 செ.மீ வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 10 செ.மீ தஞ்சாவூர் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது