இன்னும் ஓரிரு நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை புதுச்சேரி, தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு. கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.