டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் நேற்று தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
இவர் 24 ஆண்டுகளாக டென்னிஸ் உலகை கலக்கி வந்தார்.
நேற்று திடீரென்று அவர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது பலரையும் அதிர்ச்சியை அடைய வைத்திருந்தது.
இது தொடர்பாக சக டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஒரு பதிவை செய்துள்ளார்.
துகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ரஃபேல் நடால் பதிவிட்டுள்ளார்.
அதில், “அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர். இந்த நாள் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தேன்.
எனக்கும் டென்னிஸ் விளையாட்டிற்கும் சோகமான நாள் இது. உங்களுடன் இத்தனை நாட்கள் விளையாடியதை மிகுந்து மகிழ்ச்சியும், கௌரவுமாகவும் கருதுகிறேன். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல நல்ல தருணங்கள் இருந்தது.
இது போன்ற தருணங்கள் நம்மக்குள் மேலும் இருக்கும். ஏனென்றால் நாம் சேர்ந்து செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையே உள்ளன.
அது உங்களுக்கு தெரியும். தற்போது நீங்கள் உங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.