கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஷேன் வார்ன். இவருடைய 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஷேன் வார்ன் கிரிக்கெட் களத்தில் பல சிறப்பான தரமான சம்பவங்களை ஷேன் வார்ன் செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஷேன் வார்ன் அமெரிக்க கால்பந்து எனப்படும் AFL அதிகமான நாட்டம் கொண்டிருந்தார். அந்த விளையாட்டில் ஹாவ்தோர்ன் அணிக்காக டெர்மெட் பிரேர்டன் விளையாடினார். அவரை ஷேன் வார்ன் தன்னுடைய ஐகான் வீரராக கருதி வந்தார். டெர்மெட் பிரேர்டன் 23 நம்பர் ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். அவரைப் பார்த்து ஷேன் வார்ன் 23 என்ற நம்பர் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாட தொடங்கினார்.