எல்லாருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால் அது நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 2010-ம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடினார் வில்லியம்சன். கமதாபாத்தில் நடந்த அந்த முதல் போட்டியிலேயே 299 பந்துகளில், 131 ரன்களுடன், தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அடித்த இந்த இரட்டை சதத்தில் முதல் ஐம்பது ரன்களை எட்ட 105 பந்துகளை எடுத்துக் கொண்ட கேன் வில்லியம்சன், அதற்கடுத்த 50 ரன்களை, வெறும் 35 பந்துகளில் எட்டினார். டெஸ்ட்டில் 50+ ஸ்கோரை அதிகபட்சமாக 56 முறை எடுத்த முதல் நியூசிலாந்து வீரர். கேன் வில்லியம்சனின் மிகப் பெரிய பலம், விளையாடும் ஃபார்மேட்டுக்கு ஏற்றாற் போல் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டே இருப்பது! வி லவ் யூ கேன் வில்லியம்சன்!