ப்ரியா பவானி ஷங்கர் எம்.பி.ஏ பட்டதாரி. விஜயின் டிவியின் ‘கல்யாணம் முதல் காதல்வரை’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சின்னத்திரையில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். ‘கடைக்குட்டி சிங்கம்’ , ‘ மான்ஸ்டர்’, ‘மாஃபியா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கமலுடன் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.