நானும் ரவுடிதான் படத்தில் சந்தித்த காதல் ஜோடி. இருவரும் காதலிப்பதாக பேசப்பட்ட நிலையில், 2014ல் காதலை உறுதி செய்தனர். சமீபத்தில் இருவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் பணியாற்றி இருந்தனர். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கியுள்ளனர். இருவரும் சமீபத்தில் மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் பாலிவுட் நடிகர்கள் உட்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடித்த கையோடு வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றிருந்தனர். இவர்களது திருமணம் முதலில் வெளிநாட்டிலும் பின்னர் திருப்பதியிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஹனிமூன் முடித்த கையோடு மீண்டும் தங்களது சினிமா பணிகளை தொடங்கியுள்ளனர். போயஸ் கார்டனில் இவர்களது கனவு இல்லம் பலகோடி செலவில் தயாராகிக்கொண்டு இருக்கிறது.