பிரசவத்திற்கு பிறகு எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் டிப்ஸ்!



குழந்தை பிறந்ததற்கு பிறகு பெரும்பாலான பெண்களுக்கு உடல் பருமனாகி தோற்றம் மாறி விடுகிறது



பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைக்க உணவுகளில் டயட் கடைப்பிடிப்பது, உடற்பயிற்சி செய்வது நல்லது



ஆனால் இது பெரும்பாலான நடுத்தர குடும்ப பெண்களால் முடியாது



வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்தே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம்



மஞ்சள் தூளை ஒரு டம்ளர் பாலில் கலந்து, அதனுடன் சிறிது மிளகு தூளை கலந்து இரவு படுக்க செல்லும் முன்பு பெண்கள் குடிக்கலாம்



இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, காலை எழுந்ததும் அதை வெறும் வயிற்றில் குடிக்கலாம்



மதியம் மற்றும் இரவு உணவுக்கு பிறகு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்



இஞ்சியை எடுத்து கொள்ளலாம். காலை, மாலை குடிக்கும் டீயில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து கொள்ளலாம்



ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றை விட்டு, அதனுடன் சப்ஜா விதையை தூவி குடித்து வரலாம்