ஒருநாளுக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்..? இதை பார்த்து தெரிஞ்சுகோங்க!



புரதச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும் அற்புத உணவுகளில் முட்டை முக்கியமானது



இதில் அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்கள் இருப்பதால் ஆகச்சிறந்த புரத உணவாகச் சொல்லப்படுகிறது



முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது



குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பிறகுதான் முட்டை கொடுக்க வேண்டும்



முட்டையை பச்சையாகச் சாப்பிடுவதால் இன்ஃபெக்ஷன் வரலாம், கூடவே செரிமான பிரச்னையும் வரலாம்



குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்



பெரியவர்கள், கொலஸ்ட்ரால் இருக்கும் பட்சத்தில் வாரத்தில் 3 நாள்களுக்கு மஞ்சள் கருவோடு ஒரு முட்டை சாப்பிடலாம்



கொலஸ்ட்ரால் இல்லாதவர்கள் தினமும் ஒன்று எடுத்துக்கொள்ளலாம். புரதத் தேவைக்கேற்ப இரண்டு, மூன்று வெள்ளைக் கரு கூட எடுத்துக்கொள்ளலாம்



ஒருவேளை உணவுக்குப் பதிலாக வெறும் முட்டை மட்டும் சாப்பிட்டால் மலச்சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது