முட்டைகள் நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவு இந்த காலத்தில் பலரும் காலை உணவாக முட்டையை சாப்பிடுகின்றனர் முட்டைகள் விரைவில் கெட்டுப்போகாமல் தடுக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.. அளவுக்கு அதிகமாக முட்டைகளை வாங்கி சேமிக்கக்கூடாது நம்பகமான இடங்களிலிருந்து முட்டைகளை வாங்க வேண்டும் விரிசல் மற்றும் நிறமாற்றம் கொண்ட முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமிக்கவும் அட்டைப்பெட்டியில் முட்டைகளை சேமிப்பது ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க உதவும் முட்டைகளை சேமித்து வைக்கும்போது, அவற்றை கழுவக்கூடாது