நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய அளவில் ரசிகர்களை பெற்றார் இப்படத்திற்கு பின் இவர் ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றார் தற்போது பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இப்படத்தை அடுத்து பிரபாஸின் நடிப்பில் சலார் திரைப்படம் உருவாகி வருகிறது கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இப்படத்தை இயக்குகிறார் இதில் பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் செப்டம்பர் 28ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது சலார் படத்தில் பணியாற்றிய டெக்னீசியன்களுக்கு பிரபாஸ் தலா 10,000 பரிசளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து வரும் ரசிகர்கள் ரசிகர்கள் பிரபாஸின் செயலை பாராட்டி வருகின்றனர்