இனி மாதுளை சாப்பிட்டு தோலை தூக்கி வீசாதீங்க!



மாதுளை பழத்தின் ஜூஸை விட அதன் தோலில் அதிக ஆன்டிஆக்ஸிடண்டுகளும், ஊட்டச்சத்து நன்மைகளும் இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன



உங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ராலை குறைக்க மாதுளை தோல் உதவுகிறது



மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள்



கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்



தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம்.கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம்



சருமப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் மாதுளைப் பொடியைப் பயன்படுத்தலாம்



மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்



ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறையலாம்



மறதி நோய் வராமல் இருக்கலாம்