TVK பொதுக்குழு கூட்டம் - நிகழ்ச்சி ஹைலைட்ஸ்!
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று (மார்ச் 28) நடைபெறுகிறது. கட்சித் தலைவர் விஜய், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,ஆத்வ் அர்ஜூனா, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களின் உரிமைகமைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதா ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்...
சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை..இருமொழிக் கொள்கையில் உறுதி, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை,சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது அவர்களே, செயலில் அதை காட்ட வேண்டும் அவர்களே. ஒன்றிய பாஜக ஆட்சியையே பாசிச ஆட்சி என அறைகூவல் விடுத்துவிட்டு இங்க நீங்கள் செய்வது மட்டும் என்னவாம்?” என்று விஜய் சாடியுள்ளார்.
”ஜி.எஸ்.டி தொகையை வாங்கிக்கிறீங்க. ஆனால் பட்ஜெட்டில் தொகையை ஒதுக்க மாட்டேங்குறீங்க. தமிழ்நாட்டை பார்த்து கேண்டில் பண்ணுங்க சார். தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன மாநிலம் சார். பார்த்து பண்ணுங்க சார்.” என்று மத்திய அரசை சாடினார்.
பொதுக்குழுவு கூட்ட மேடையில் வேலுநாச்சியார், காமராஜர், அம்பேத்கர், பெரியார், அஞ்சலையம்மாள் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
1500 பேருக்கு பொங்கல், வடை, சட்னி, சாம்பார் உடன் காலை உணவு. 2,500 பேருக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், மிளகு ரசம், தயிர் வடை, இறால் 65, சைவ மீன் குழம்பு உள்பட 22 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தவெக தலைவர் விஜய் கட்சியின் பெண் நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிட்டார்.