பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது அமலாக்கத்துறையால் செய்யப்பட்டார்.



சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில் அவர் இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் இருந்த நிலையில், தற்போது அவர் தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய ஆளுநர் மாளிகைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.



ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.



அதிமுக ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.



2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியர் அருள்மணி போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றார் என செந்தில் பாலாஜி மீது புகார் அளித்திருந்தார்.



இது தொடர்பாக அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி பல முறை சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.



இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.