அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் மோடி பிரார்த்தனை அரிச்சல் முனைக்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தார். அரிச்சல் முனையில் உள்ள தூணிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோதண்டராமா் கோயிலுக்குச் சென்றார். அங்குள்ள ஸ்ரீராமர், சீதா, அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ”ஸ்ரீ ராமர் வழிபட்ட கடவுளால் நானும் ஆசீர்வதிக்கப்பட்டதை பாக்கியமாக உணர்கிறேன்.” என்று அவர் தெரிவித்தார். சீறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி.. ” அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று நான் சென்ற நிகழ்வை எப்போதும் மறக்க இயலாது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் காலம் கடந்த பக்தி நிரவியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.