கடைகளில் இறைச்சி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை இறைச்சியின் நிறம் ரொம்பவே முக்கியம். அதுவே ஃப்ரஷாக இருக்கும் என்பதை சொல்லும். இறைச்சியின் மணம் குறித்து கவனிக்க வேண்டும். இறைச்சி ஃப்ரஷ்கா இருப்பது அதை எப்படி வெட்டியிருக்கிறார்கள் என்பதிலேயே தெரிந்துவிடும். இறைச்சியை உற்று கவனித்தால் அதன் டெக்ஷர் நன்றாக தரும். கடையில் வாங்கும்போது புதிதாக வெட்டப்பட்ட இறைச்சியா என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பாக்கெட்களில் இறைச்சி வாங்கும் பழக்கம் இருந்தால் பயன்படுத்தும் தேதி குறித்து விவரங்களை கவனிக்கவும். எப்போது இறைச்சி வெட்டப்பட்டது, எந்த நாள் வரை பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வெகுநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் அதிக நேரம் வைக்கப்பட்ட இறைச்சியையும் சாப்பிட கூடாது. கவனமாக இறைச்சி வாங்கவும்.