மாணிக்க விநாயகம் மயிலாடுதுறையில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு வயது 78. இவர் பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்ம ஸ்ரீ வழுவூர் ராமைய்யா பிள்ளையின் இளைய மகன் ஆவார். தில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ள கெளுத்தி ’ என்ற பாடலை பாடி தனது திரைவாழ்கையை தொடங்கினார். 800க்கும் மேற்ப்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். 15,0000 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார். திருடா திருடி, கம்பீரம், வேட்டைக்காரன், சிங்கம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மாணிக்க விநாயகத்துக்கு தனது 50 வயதில்தான் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.