மன்சூர் அலி கான் பட்டோடி: இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அரசியலில் சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரர் இவர் தான். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கீர்த்தி ஆசாத்: 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த ஆசாத் 3 முறை எம்பியாக இருந்துள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்து: சிக்சர் சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாபில் அமைச்சராக இருந்துள்ளார்.
மனோஜ் பிரபாகர்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு இவர் பாஜகவில் சேர்ந்தார்.
முகமது அசாருதின்: 2009ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியின் எம்பியாக முதல் முறையாக இவர் தேர்வாகினார்.
சேத்தன் சௌஹான்: உத்தரப்பிரதேசத்திலிருந்து இரண்டு முறை எம்பியாக இவர் தேர்வாகியிருந்தார்.
வினோத் காம்ப்ளி: 2009ஆம் ஆண்டு மும்பையில் லோக் பாரதி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.
முகமது கைஃப்: 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்தார்.
கவுதம் கம்பீர்: 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லியிலிருந்து இவர் பாஜக எம்பியாக தேர்வாகியுள்ளார்.
மனோஜ் திவாரி: 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பாக இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.