பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது



இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்



பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்



கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கலாம்



கருப்பட்டியில் கொஞ்சம் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையலாம்



சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்



ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்குமாம்



குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கலாம்



கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாக வாய்ப்புள்ளது



குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் இதை தொடர்ந்து சாப்பிடலாம்