தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்ற பட்டம் பெற்றவர் ஜெமினி கணேசன் இன்று அவரின் 18ம் ஆண்டு நினைவு நாள் கருப்பு வெள்ளை காலத்தில் திரையை கலக்கிய கலர்ஃபுல் நாயகன் இவரின் இயற்பெயர் ராமசாமி கணேசன் ஜெமினி ஸ்டூடியோ இவரை அறிமுகப்படுத்தியதால் ஜெமினி கணேசன் என அழைக்கப்பட்டார் புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவாக இருந்து நடிகராக ஜொலித்தவர் ரொமான்டிக் திரைப்படங்களில் அதிகம் நடித்ததால் காதல் மன்னன் என அழைக்கப்பட்டார் 50 ஆண்டு கால திரைப்பயணத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பத்மஸ்ரீ விருது பெற்றவர் இந்திய அஞ்சல் துறை இவரின் உருவம் பதித்த அஞ்சல் தலையை 2006ல் வெளியிட்டு கவுரவித்தது