பலருக்கும் வேலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் அம்பானி போல் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ், ஜெஃப் வீனர் உள்ளிட்ட உலக பணக்காரர்களின் வெற்றிக்கான ரகசியத்தை இங்கு பார்க்கலாம் வேலைப்பார்க்கும் போது ரிலாக்ஸ் செய்ய நாம் காஃபி குடிப்போம். ஆனால், அவர்கள் தியானத்தை மேற்கொள்கிறார்கள் ஒருநாளைக்கு 10-15 நிமிடங்களை தியானத்திற்கு ஒதுக்கினால் போதும் தியானம் கவனத்தை மேம்படுத்துகிறது. தினசரி வேலைகளில் கவனத்துடன் இருக்க உதவும் இது நினைவாற்றலைக் கூர்மையாக்கும். அன்றாட நடக்கும் விஷயங்களை நியாபகத்தில் வைத்துக்கொள்ள உதவும் மன அழுத்தத்தை குறைக்கிறது. படைப்பாற்றலை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் ரிலாக்ஸாக வித்தியாசமாக யோசிக்கலாம் ஆழ்ந்த உறக்கத்தை தூண்டுகிறது. எதிர்மறையான எண்ணங்களை அழிக்கிறது. இதனால் எரிச்சல் அடையாமல் நிதானமாக இருக்கலாம் உங்களை சுற்றியுள்ள நபர்களுடனான உறவை காக்க உதவுகிறது. குடும்பம், நண்பர்கள், வேலைப்பார்க்கும் இடத்தில் இருக்கும் நபர்களுடன் நல்ல உறவு நீடிக்கும் அனைத்தும் சரியாக இருந்தால் நன்றாக வேலை செய்து வெற்றி அடையலாம்