ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது சராசரி விஷயமாகிவிட்டது ஸ்மார்ட் போனை இரவு நேரத்தில் பயன்படுத்துவது நல்லதல்ல உறக்கத்தை தூண்டும் மெலடோனின் சுரப்பை, செல்போன் கதிர்கள் குறைக்கும் அதனால் இரவில் தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் லேட்டாகத்தான் வரும் நீண்ட நேரம் போன்களை பயன்படுத்துவது கண்களுக்கும் நல்லதல்ல போனின் ஒளியிலிருந்து கண்களை காக்க உதவும் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.. 20-20-20 முறையை பின்பற்றலாம் 20 நிமிடங்கள் போனை பயன்படுத்திய பின்னர் 20 நொடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அந்த ஓய்வு நேரத்தில் கண்களை மூடிவிட்டு, போனை 20 அடி தூரத்தில் வைக்க வேண்டும் இதனை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் செய்ய வேண்டும். இது உங்களின் கண்களை பாதுகாக்க உதவும்