மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, மெட்ராஸ் ஐ



இந்த கண் நோய், வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. சில நேரங்களில் கண் பார்வையை இது கடுமையாக பாதிக்கும்



கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்



தொற்று தீவிரமாக இருந்தால் வீக்கம், பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும்



நோய்த்தொற்று ஏற்பட்ட நபர்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்



வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



நல்ல உறக்கம், ஓய்வு பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய உதவி செய்யும்



கண்களை அடிக்கடி தொடக்கூடாது



தொற்று பாதித்தவர்கள் செல்போன்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்



மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை பயன்படுத்த வேண்டும்