ஊலாங் டீ அதிகம் அருந்துவது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனேற்றத்தை (Oxidation)வழங்கும். சீனாவில் பல ஆயிரம் காலமாக இந்த டீ புழக்கத்தில் உள்ளது. இது கேமிலியா செனன்சிஸ் என்னும் ஒருவகை தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை வயதாவதில் இருந்தும், மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கின்றன. இதயத்திற்கு நல்லது இதய நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளையும் ஊலாங் தேநீர் குறைப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ரத்த அழுத்தம் குறைந்து, கொலஸ்ட்ரால் குறைந்து, இதய ஆரோக்கியம் போன்றவை வலுவடைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஊலாங் தேநீரில் உள்ள பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்