1/2 கப் பாசிப்பருப்பை, நன்கு கழுவி, பிரஷர் குக்கரில் சேர்க்க வேண்டும்



11/4 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக வைத்து மசிக்கவும்



1 கப் ஓட்ஸை எடுத்து, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்



  2 கப் தண்ணீர் சேர்த்து ஓட்ஸை நன்றாக வேகவைத்துக் கொள்ள வேண்டும்



இதனுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து, உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்



அடுப்பில் கடாய் வைத்து 3 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், சீரகம் மிளகு சேர்த்திடுக



பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்



இதை பொங்களுடன் சேர்த்தால் சுவையான வெண்பொங்கல் தயார்