கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்



இதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு ,சீரகம் , பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்க்க வேண்டும்



பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்



இந்த கலவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்



வேக வைத்த 1 கப் பச்சை பட்டாணி, 1 கொத்து வெந்தய கீரையை வெண்ணெயில் வதக்குக



வேறொரு கடாயில் நெய் சேர்த்து , முந்திரி, பூண்டு ஆகியவை சேர்த்து வதக்குக



அரைத்து வைத்துள்ள கலவையை இதில் சேர்த்து பச்சை வாசம் போக வதக்குக



தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்



வதக்கிய வெந்தயக்கீரை, பச்சைப் பட்டாணி, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்



குறைந்த தீயில் 6 நிமிடம் வேக வைத்து கசூரி மேத்தி தூவி, கிளறி இறக்க வேண்டும்