மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் படம் வெளியாகியுள்ள இதே நாளில் நடிகை த்ரிஷாவுக்கு, அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது இப்படத்தில், குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார் இதில் குந்தவையாக வரும் த்ரிஷாவின் நடிப்பு மட்டுமல்ல அவரின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்துள்ளது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன்கள் த்ரிஷாவின் உடை, அவரின் மேனரிசங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது 50 வருட கனவான பொன்னியின் செல்வன் நாவல் படமாக ஆகியுள்ளதன் மூலம் த்ரிஷாவுக்கு இந்நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது இதுமட்டுமல்லாமல் 23 ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா வாழ்க்கையில் இந்நாள் மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது 1999 ஆம் ஆண்டு இதே நாளில் தான் த்ரிஷா மிஸ் சென்னை அழகிப்போட்டியில் முதலிடம் பெற்று அசத்தினார்