தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாட தவிர்க்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

வீட்டு அலங்காரம்:

உங்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்குகள், ரங்கோலி மற்றும் மலர்களால் அலங்கரிக்கலாம்

புதிய ஆடை:

விழாவைக் கொண்டாட புதிய அல்லது பாரம்பரியமான பண்டிகை உடைகளை அணியலாம்.முடிந்த அளவிற்க்கு சிந்தடிக் ஆடைகளை தவிற்க்கலாம்

இனிப்புகள் மற்றும் உபசரிப்புகள்:

நல்லெண்ணத்தை வளர்க்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளைப் பரிமாறி கொண்டாடலாம்

விதிமுறைகளைப் பின்பற்றவும்:

பட்டாசுகளைப் பயன்படுத்தினால், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

வளங்களை வீணாக்காதீர்கள்:

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும்

பாதுகாப்பு:

பட்டாசுகளைக் கையாளும் போது எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள் மற்றும் நெரிசலான பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்

செல்லப்பிராணி:

பட்டாசு வெடிக்கும் போது செல்லப்பிராணிகள் ​​சத்தத்தால் பயந்துவிடும் வீட்டுக்குள்ளேயே வைத்து பாதுகாக்க வேண்டும்

அதிகப்படியான குடிப்பழக்கம்:

நீங்கள் மது அருந்தினால் பொறுப்புடன் இருக்க வேண்டும் அதிகபடியான மது அருந்துதல் ஆபத்தில் முடியலாம்

குப்பை தவிர்க்கவும்:

கொண்டாட்டங்களுக்குப் பிறகு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்து பொறுப்புடன் கழிவுகளை அகற்ற வேண்டும்

அதிக சத்தம் :

அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் எளிதில் தீ பிடிக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்