பண்டித் குயின் என்று அழைக்கப்படும் பூலான் தேவி பற்றி தெரியாதவர்களே இல்லை. இவர் ஒரு கேங்க்ஸ்டராக மட்டுமில்லாமல், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு குரல் கொடுக்கும் ஒரு அரசியல்வாதியாகவும் இருந்தார்.
'Godmother' என்று அழைக்கப்படும் இவர், குஜராத்தில் கூலிப்படை கொலையாளியாகவும், கொள்ளைக்காரியாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், 1990-95 வரை குட்டியானா சட்டமன்ற தொகுதியின் MLA-ஆகவும் இருந்துள்ளார்.
சோனு புஞ்சபன் (எ) கீதா அரோரா, ஒரு பாலியல் கடத்தல்காரர். 2020-ல் சிறிய குழந்தையை கடத்தி போதை மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்ய முயன்ற குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
1990-களில் 'Lady Don' என்று அழைக்கப்படும் கன்வர் தாகூர் உத்தரப் பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தை அமைத்துக்கொண்டு கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
1980-களில் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்றவற்றை எல்லாம் இயக்கும் முக்கிய நபராக இருந்தார்.
டெல்லி மற்றும் ஹரியானா மாநிலத்தில் 1980 - 1990 வரையில் இவர் செய்த தொடர் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றிற்காக அடிக்கடி செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார்.
பூலான் தேவியை கண்டு ஈர்க்கப்பட்டு பண்டித்-ஆக மாறிய சீமா பரிஹார், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். மேலும் 2010-ம் ஆண்டின் Bigg Boss போட்டியாளராகவும் இருந்துள்ளார்.
ரேனுகாவும் அவர் சகோதரியும் இணைந்து 13 குழந்தைகளை கடத்தி அதில் 5 பேரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக அறியப்படுகின்றனர். இவர்கள் திருடுவதற்காக குழந்தைகளை கடத்தியதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.