க்யூட்டான மீன்.. டால்பினை பற்றி உங்களுக்கு இது தெரியுமா?

Published by: பிரியதர்ஷினி

பாலுாட்டி வகை உயிரினம் டால்பின். இதில், 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் பாட்டில் மூக்கு டால்பின் வினோதமானது

இதன் முதுகு பகுதி அடர் சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் இருக்கும். வயிற்றுப் பகுதி வெள்ளையாக இருக்கும். உடல் ரப்பர் போல் வழுவழுப்பாக இருக்கும்

இந்த விலங்கினத்தின் ஆயுட்காலம், 25 ஆண்டுகள் ஆகும்

சராசரியாக, 8.5 அடி நீளம் வரை வளரும். இறால், சிறு மீன்களை உண்டு வாழும்

100 கிலோ எடை உள்ள டால்பின் ஒரு நாளில், 30 கிலோ எடையுள்ள உணவை உண்ணும்

இதன் கர்ப்ப காலம், 12 மாதங்கள்

பிரசவத்தில் குட்டியின் வால் பகுதி தான் முதலில் வெளி வரும். பிறந்தவுடன் குட்டியை நீரின் மேல்பரப்புக்கு எடுத்து சென்று, சுவாசிக்க வழி செய்யும்

டால்பின், சராசரியாக மணிக்கு, 20 கி.மீ. வேகத்தில் நீந்தும். 30 அடி உயரம் வரை, துள்ளி குதிக்கும்

இந்த கடல் உயிரினம் நாயை விட புத்திசாலி, எளிதில், எதையும் கற்றுக்கொள்ளும், வீசும் பந்துக்களை பிடிக்கும், தாவி விளையாடி வித்தைகள் செய்யும்

ஒரே நேரத்தில் ஆயிரம் டால்பின்கள் வரை கூட்டமாக செல்லும்

தூங்கும் போதும் ஒரு கண் திறந்தே இருக்கும்